/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கண்டித்து சுயேச்சை வேட்பாளர் சாலை மறியல்
/
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கண்டித்து சுயேச்சை வேட்பாளர் சாலை மறியல்
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கண்டித்து சுயேச்சை வேட்பாளர் சாலை மறியல்
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கண்டித்து சுயேச்சை வேட்பாளர் சாலை மறியல்
ADDED : ஏப் 18, 2024 11:35 PM

வில்லியனுார் : லோக்சபா தேர்தலில் பா.ஜ., மற்றும் காங்., கட்சி சார்பில், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை கண்டித்து சுயேச்சை வேட்பாளர் வில்லியனுாரில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., - காங்., கட்சியினர் தொகுதி முழுதும் ஓட்டுக்கு பணம் கொடுத்து வருவதை கண்டித்து, சுயேச்சை வேட்பாளர் மாஸ்கோ தனது ஆதரவாளர்களுடன் வில்லியனுார், ஒதியம்பட்டு நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் மறியலில் ஈடுபட்டார்.
பணம் கொடுக்கும் இரு கட்சிகளின் வேட்பாளர்களை கைது செய்திடவும், தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தியும், தேர்தல் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்.
தகலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, சுயேச்சை வேடபாளர் மாஸ்கோவிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனர்.
சரியான நடவடிக்கை எடுக்காத பச்சத்தில் இன்று (19ம் தேதி) காலை 8:00 மணியளவில் புதுச்சேரி காந்தி சிலை பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவேன் என, தெரிவித்தார். திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.