/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் முதல் முறையாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்
/
புதுச்சேரியில் முதல் முறையாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்
புதுச்சேரியில் முதல் முறையாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்
புதுச்சேரியில் முதல் முறையாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதல்
ADDED : செப் 01, 2024 04:15 AM

புதுச்சேரியில் முதல் முறையாக இந்தியா யு-19 அணி, ஆஸ்திரேலியா யு-19 அணி மோதும் 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் புதுச்சேரியில் வரும் 21, 23, 26 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
இதுகுறித்து கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரியின் நிர்வாகி சந்திரன் கூறியதாவது:
ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக, இந்தியா யு-19 அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு நாள் போட்டிகளில் ஆடுகின்றன.
இதில், 3 ஒருநாள் போட்டிகள் புதுச்சேரி, துத்திப்பட்டில் உள்ள சீகெம் கிரிக்கெட் மைதானத்தில் வரும் செப்., 21, 23, 26 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் புதுச்சேரியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க பல்வேறு நடவடிக்கைகளை கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மேற்கொண்டு வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் திராவிட்டின் மகன் சமித் திராவிட் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவர், ஆடும் அறிமுகப் போட்டியே புதுச்சேரியில் நடைபெறும் ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிரான போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா ஆஸ்திரேலியா யு-19 போட்டிகள் அட்டவணை:
முதல் ஒருநாள் போட்டி வரும் 21 ம் தேதியும், 2வது ஒரு நாள் போட்டி 23ம் தேதியும், 3வது ஒரு நாள் போட்டி 26ம் தேதியும் நடக்கிறது. போட்டிகள் அனைத்தும் காலை 9:30 மணிக்கு துவங்குகிறது. இவ்வாறு அவர், கூறினார்.