/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இண்டியா கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்
/
இண்டியா கூட்டணி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : ஏப் 01, 2024 06:43 AM

புதுச்சேரி : இண்டியா கூட்டணி தட்டாஞ்சாவடி தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இ.கம்யூ., தட்டாஞ்சாவடி தொகுதி குழு அலுவலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு இ.கம்யூ., மாநில துணைச் செயலாளர் சேது செல்வம் தலைமை தாங்கினார். காங்., மாநில செயல் தலைவர் நீல கங்காதரன் முன்னிலை வகித்தார். இ.கம்யூ., நிர்வாகிகள் முருகன், தென்னரசு, எழிலன், செல்வம், செழியன், காங்., நிர்வாகிகள் வேணுகோபால், ரவிசந்திரன், ஆனந்தபாபு, தி.மு.க., நிர்வாகிகள் மதிமாறன், பழனிச்சாமி, சுந்தர் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில், லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வேட்பாளர் வைத்திலிங்கத்தை அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற தட்டாஞ்சாவடி தொகுதி முழுவதும் தீவிர களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

