/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்தியாவில் மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆண்டுக்கு 2 லட்சம் சிறுநீரகங்கள் தேவை தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு இயக்குனர் தகவல்

ADDED : மே 18, 2024 06:31 AM

புதுச்சேரி : இந்தியாவில் ஒரு ஆண்டிற்கு 2 லட்சம் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படுகிறது என, தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு இயக்குனர் அனில் குமார் கூறினார்.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் மத்திய அரசின் நிதி 1.5 கோடி, மாநில அரசின் நிதி 32 லட்சம் என, ஒரு கோடியே 37 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்படும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையத்தை தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு இயக்குனர் அனில் குமார் நேற்று ஆய்வு செய்தார்.
அதன் பின் நடந்த மருத்துவக் கருத்தரங்கில் அவர், பேசியதாவது;
இந்தியாவில் ஆண்டு ஒன்றிற்கு ஒரு லட்சத்து 75 ஆயிரத்திலிருந்து 2 லட்சம் சிறுநீரகங்கள், 50 ஆயிரம் கல்லீரல்கள், 50 ஆயிரம் இருதயம் ஆகியன மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படுகிறது. ஆனால் கடந்தாண்டு 12,550 சிறுநீரகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதில் உயிருடன் இருந்தவர்களிடம் இருந்து 10,920, மூளை சாவு அடைந்தவர்களிடம் இருந்து 1,630 பெறப்பட்டுள்ளது.
இதேபோன்று கல்லீரல் உயிருடன் இருந்தவர்களிடம் 3,336, மூளைசாவு அடைந்தவர்களிடம் 828 உள்பட என, மொத்தம் 4,171 பெறப்பட்டுள்ளது. இருதயம் 221, நுரையீரல் 191, கணையம் 21, சிறுகுடல் 14 ஆகியவை மூளை சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் உடல் உறுப்பு தானம் செய்வது குறித்த விழிப்புணர்வு குறைந்த அளவிலேயே உள்ளது. இவ்வாறு அவர், பேசினார்.
கருத்தரங்கில் சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிசா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், நோடல் அதிகாரி குமார், குறைதீர் அதிகாரி ரவி, டாக்டர்கள் வாசுதேவ், முருகேசன், ஸ்ரீஜித் பரமேஸ்வரன், ஹேமச்சந்திரன், வனஜா வைத்தியநாதன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.