ADDED : மே 08, 2024 02:15 AM

திருக்கனூர் : மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து இந்திய கம்யூ., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர்.
மண்ணாடிப்பட்டு தொகுதி இந்திய கம்யூ., சார்பில் திருக்கனுார் கடைவீதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தொகுதி செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் மனனாதன், திருமுருகன் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் சேது செல்வம், கண்டன உரையாற்றினர். இதில், தொகுதி பொறுப்பாளர்கள் அருணாசலம், சரவணன், கருணாகரன், சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், கிராமப்புற மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு மதியம் 2 மணி வரை நீட்டிக்க வேண்டும். மண்ணாடிப்பட்டு சமுதாய நல வழி மையத்தில் பாம்பு கடிக்கு மருந்து இல்லாமல் இறப்பு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்திட வேண்டும்.
30 படுக்கை உள்ள மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

