/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபர் உயிரிழந்த விவகாரம் இந்திய கம்யூ., போராட்டம்
/
வாலிபர் உயிரிழந்த விவகாரம் இந்திய கம்யூ., போராட்டம்
வாலிபர் உயிரிழந்த விவகாரம் இந்திய கம்யூ., போராட்டம்
வாலிபர் உயிரிழந்த விவகாரம் இந்திய கம்யூ., போராட்டம்
ADDED : ஜூன் 18, 2024 04:59 AM
புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் உடல் பருமன் அறுவை சிகிச்சையில் இறந்த விவகாரத்தில், சென்னையில் இன்று நடக்கும் போராட்டத்தில் புதுச்சேரி கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்கின்றனர்.
இந்திய கம்யூ., கட்சியின் மாநில துணை செயலாளர் சேதுசெல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி, புதுச்சேரியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற 24 வயது இளைஞர், சென்னையில் உடல் பருமன் குறைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது உயிர் இழந்தார்.
சம்பந்தப்பட்ட மருத்துவமனையை மூட வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட குழு சார்பில் இன்று 18ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்த போராட்டத்தில் புதுச்சேரியில் இருந்து 300க்கும் மேற்பட்ட இந்திய கம்யூ., கட்சியினர் கலந்து கொள்கின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.