ADDED : ஜூன் 26, 2026 07:02 PM
புதுச்சேரி: அரியாங்குப்பம் மற்றும் மணவெளி தொகுதி இந்திய கம்யூ., குழு கூட்டம் நடந்தது.
முருங்கப்பாக்கம் கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, சக்திவேல் தலைமை தாங்கினார். முன்னதாக மாதர் சங்க தலைவர் சரளா மற்றும் ஏழுமலை ஆகியோர் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில், வேலை குறித்து தொகுதி செயலாளர் சுகதேவ் பேசினார்.
எதிர்கால கடமைகள் குறித்து மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் அந்தோணி, கீதநாதன் பேசினர். நிகழ்ச்சியில், தொகுதி குழு உறுப்பினர்கள் சிவராம கிருஷ்ணன், முருகன், முத்துவேல், செல்வராஜ், ஆறுமுகம் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வரும் ஜூலை 10 முதல் 12ம் தேதி வரை, மூன்று நாட்கள் கோபி செட்டிபாளையத்தில் நடைபெறும் கல்வி பயிற்சி முகாமில் 4 பேர் கலந்து கொள்வது; அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருந்து சிகிச்சை அளிக்க வேண்டும்; அங்கு, இ.சி.ஜி., டெக்னீசியன் நியமனம் செய்ய வேண்டும்; என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜூலை, 22ம் தேதி ஆரம்ப சுகாதார நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
