‘போக்சோ’ வழக்கில் கைதான தற்காலிக ஆசிரியர் ‘டிஸ்மிஸ்’
‘போக்சோ’ வழக்கில் கைதான தற்காலிக ஆசிரியர் ‘டிஸ்மிஸ்’
ADDED : ஜூன் 26, 2026 07:41 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ‘போக்சோ’ வழக்கில் கைதான தற்காலிக ஆசிரியரை ‘டிஸ்மிஸ்’ செய்து பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, வெள்ளிமலையில் உள்ள அரசு ஏகாலைவா உண்டு, உறைவிடப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக சிறுமிகளை தொந்தரவு செய்வதாக புகார் எழுந்தது.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி பள்ளி விடுதிக்குச் சென்று மாணவிகளிடம் தனித் தனியாக விசாரணை நடத்தினார்.
அதில், பள்ளியில் தற்காலிக கணினி ஆசிரியராக பணிபுரிந்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சுரேஷ், 42; என்பவர் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ‘போக்சோ’ சட்டத்தில் சுரேஷ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் சுரேஷை ‘டிஸ்மிஸ்’ செய்து பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
