/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கழிவுநீர் வாய்க்காலை அதிகாரிகள் ஆய்வு
/
கழிவுநீர் வாய்க்காலை அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஆக 05, 2024 09:55 PM
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதியில் அடைப்பு ஏற்பட்ட கழிவுநீர் வாய்க்காலை உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்திரா நகர் தொகுதி கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு கொசுக்கள் அதிகளவில் பெருகி சுகாதார சீர்கோடு ஏற்படுவதாக தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அதையடுத்து, அரசு கொறடா ஆறுமுகம் எம்.எல்.ஏ., உழவர்கரை நகராட்சி ஆணையரிடம், இந்திரா நகர் தொகுதியில் உள்ள கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களை துாய்மைப்படுத்த கேட்டுக்கொண்டார். இதையடுத்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் அதிகாரிகள் முத்திரையர்பாளையம் பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலை ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வந்த அரசு கொறடா ஆறுமுகம், இந்திரா நகர் தொகுதியில் உள்ள அனைத்து வாய்க்கால்களை துார் வாரி துாய்மைப்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தினார்.