/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆயுதப்படைக்கு மாற்றம் ரவுடி கருணா எஸ்கேப் எதிரொலி

ADDED : ஜூன் 22, 2024 04:33 AM
புதுச்சேரி : முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
காலாப்பட்டு சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்தவர் ரவுடி கருணா. உடல்நிலை சரியில்லாத மனைவியை சந்திக்க கடந்த 11ம் தேதி பரோலில் வெளியே வந்தார். 13ம் தேதி சிறைக்கு திரும்ப வேண்டிய கருணா, தனது குடும்பத்துடன் எஸ்கேப் ஆனார்.
சிறைத்துறை புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தனிப்படை அமைத்து கோவையில் பதுங்கி இருந்த கருணாவையும், அவரதுக்கு உதவிய 8 பேரையும் போலீசார் கைது செய்து சிறைக்கு அனுப்பினர்.
பரோலில் வந்த ரவுடியை சரிவர கண் காணிக்காமல் தப்ப விட்ட புகாரில் சிக்கிய முதலியார்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
முத்தியால்பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணன், முதலியார்பேட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை போலீஸ் தலைமையக எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன் வெளியிட்டுள்ளார்.
போலீஸ் வேனில் அழைத்து செல்லப்பட்ட ரவுடி ஜெகன் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தின்போது, பாதுகாப்பு அதிகாரியாக இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் சென்றவர் என்பது குறிப்பிடதக்கது.