/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 300 நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி துவக்கம்
/
புதுச்சேரியில் 300 நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி துவக்கம்
புதுச்சேரியில் 300 நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி துவக்கம்
புதுச்சேரியில் 300 நவீன கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி துவக்கம்
ADDED : ஜூன் 27, 2024 11:16 PM

புதுச்சேரி: புதுச்சேரி நகரம் முழுவதும் 300 நவீன கண்காணிப்பு கேமராக்களை போக்குவரத்து சிக்னல் மற்றும் முக்கிய பகுதிகளில் அமைக்கும் பணி துவங்கி உள்ளது.
புதுச்சேரியில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. வெளி மாநில சுற்றுலா பயணிகள் வருகையால், வார இறுதி நாட்கள் மட்டுமின்றி, சாதாரண நாட்களிலும், நகரப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சாலைகளில் அதிக வேகத்தில் பைக்குகளில் சென்று விபத்து ஏற்படுத்துவது, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது போன்றவற்றை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் போக்குவரத்து சிக்னல் மற்றும் முக்கிய பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
முதல் கட்டமாக கருவடிக்குப்பம் சிவாஜி சிலை, லதா ஸ்டீல், ராஜிவ் சிக்னல், கொக்கு பார்க் ஆகிய, 4 சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ராஜிவ் சிக்னலில், 4 அதி நவீன கேமராக்கள் நேற்று பொருத்தப்பட்டன.
இந்த கேமராக்கள் மூலம் வழுதாவூர் சாலை, திண்டிவனம் சாலை, சென்னை இ.சி.ஆர் சாலை, காமராஜர் சாலை, கடலுார் சாலை ஆகிய ஐந்து வழிகளையும் கண்காணிக்க முடியும்.
இந்த, 4 சிக்னல்களின் கண்காணிப்பு கேமராக்களையும் லதா ஸ்டீல் அருகில் உள்ள, நவீன மீன் அங்காடி கட்டடத்தின் முதல் மாடியில் உள்ள ஒருங்கிணைந்த கண்ட்ரோல் ரூமில் இருந்து, கண்காணிக்க உள்ளனர்.
இது தவிர, 4 சிக்னல்களில் உள்ள சிலைகளின் மேற்பகுதியிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.