/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முத்தியால்பேட்டையில் கண்காணிப்பு கேமரா இயக்கி வைப்பு
/
முத்தியால்பேட்டையில் கண்காணிப்பு கேமரா இயக்கி வைப்பு
முத்தியால்பேட்டையில் கண்காணிப்பு கேமரா இயக்கி வைப்பு
முத்தியால்பேட்டையில் கண்காணிப்பு கேமரா இயக்கி வைப்பு
ADDED : ஏப் 29, 2024 05:19 AM

புதுச்சேரி : முத்தியால்பேட்டையில், ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பொருத்தப்பட்ட புதிய கண்காணிப்பு கேமராக்களை, முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன் திறந்து வைத்தார்.
முத்தியால்பேட்டை தொகுதி, சின்னாத்தா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் அமைந்துள்ள சப்தகிரி கார்டன் பகுதி மக்கள், அப்பகுதியின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, முன்னாள் எம்.எல்.ஏ., நந்தா சரவணன், அவரது சொந்த செலில், ரூ.1 லட்சம் மதிப்பீட்டில், கண்காணிப்பு கேமராக்களை அமைத்து கொடுத்து, நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார்.
மேலும், அவர் சப்தகிரி கார்டன் நல வாழ்வு சங்க பெயர் பலகையையும் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சவுரிராஜன், எழிலன், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் ரவி, தனசேகர், சப்தகிரி கார்டன் நல வாழ்வு சங்க தலைவர் சுகுமாரன், நாகராஜன், எழிலரசன், ஞானப்பிரகாசம், ராமதாஸ், சுதாகர், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

