/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் பணி தீவிரம்

ADDED : ஏப் 29, 2024 03:55 AM
புதுச்சேரி : சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஓரிரு நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரியில் கடந்த மார்ச் 2ம் தேதி மாயமான 9 வயது சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
முத்தியால்பேட்டை போலீசார் பாலியல் பலாத்காரம், கொலை வழக்கு பதிந்து சோலை நகர் கருணாஸ்,19; விவேகானந்தன், 57; ஆகியோரை கைது செய்தனர்.
சீனியர் எஸ்.பி., கலைவாணன், எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா தலைமையிலான சிறப்பு விசாரணை குழு, சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்த தடயங்கள், பெற்றோர் ரத்த மாதிரிகள், கைது செய்யப்பட்ட இருவரின் ரத்த மாதிரிகளை சேகரித்து, தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பி அறிக்கைகளை பெற்றனர். இந்த அறிக்கைகள் டி.ஜி.பி., மற்றும் சட்டத்துறையின் ஆலோசனை பெற அனுப்பப்பட்டுள்ளது.
போக்சோ வழக்கில் 60 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால், இன்று அல்லது நாளைக்குள் சிறுமி பாலியல் பலாத்கார கொலை வழக்கின் குற்றப்பத்திரிகை, போக்சோ விரைவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.