/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவேகானந்தா பள்ளியில் சர்வதேச யோகா தினம்
/
விவேகானந்தா பள்ளியில் சர்வதேச யோகா தினம்
ADDED : ஜூன் 22, 2024 04:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லாஸ்பேட்டை செல்லப் பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி வளாகத்தில் நடந்த யோகா தின விழாவில், பள்ளி தாளாளர் செல்வகணபதி எம்.பி. ,தலைமை தாங்கினார்.
பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா, பள்ளி முதல்வர் கீதா முன்னிலை வகித்தார். யோகா தின விழாவையொட்டி நடந்த பயிற்சியில் 600 பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று ஒரே நேரத்தில் யோகாசனம் செய்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை உடற்கல்வி இயக்குநர் லோக்நாத் பெஹரா மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.