/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச சுகாதார கருத்தரங்கம்
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச சுகாதார கருத்தரங்கம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச சுகாதார கருத்தரங்கம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சர்வதேச சுகாதார கருத்தரங்கம்
ADDED : செப் 09, 2024 05:09 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை சார்பில், சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.
பல்கலைக் கழக துணை வேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கினார். பல்கலைக்கழக பதிவாளர் (பொ) ரஜ்னீஷ் பூட்டானி துவக்க உரையாற்றினார். காலநிலை ஆய்வுகள் மையத்தின் மையத் தலைவர் மதிமாறன் நடராஜன், நிலையான தன்மை மற்றும் ஒரே சுகாதார அணுகுமுறை ஆகியவற்றின் மூலம் உலகளாவிய சுகாதார சவால்களை நிவர்த்தி செய்வதில் பலதரப்பட்ட ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
பாலாஜி வித்யாபீடத்தின் துணை வேந்தர் பிஸ்வாஸ் சிறப்புரையாற்றினார். பெங்களூரு சுவிட்சர்லாந்து துாதரக தலைமை நிர்வாக அதிகாரி ஜோனஸ் ப்ருன்ச்விக் கருத்துரை வழங்கினார். கருத்தரங்கில், மனித விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் சிக்கலான சவால்களை நிவர்த்தி செய்வதில் உலகளாவிய ஒத்துழைப்பின் அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது.
ராஜிவ் காந்தி கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் கல்லுாரி, பாலாஜி வித்யாபீடம், ஜிப்மர் நிறுவனம், அரவிந்த சங்கம், பி.ஜே.என். கல்லுாரி ஆப் அக்ரிகல்ச்சர் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஐ.சி.எம்.ஆர்., வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம், நல்லம் கிளினிக் உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கேற்றன. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய இணை பேராசிரியர் மணிகண்டன் நன்றி கூறினார்.