ADDED : ஜூன் 24, 2026 04:00 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஒலிம்பிக் சங்கத்தின் சார்பாக சர்வதேச ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது.
லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில், மாநில ஒலிம்பிக் சங்க பொதுச் செயலாளர் வளவன், தலைமை நிர்வாக அதிகாரி முத்து கேசவலு, துணைத் தலைவர்கள் குணசேகரன், கோபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இந்திய ஒலிம்பிக் சங்க கொடி, மாநில ஒலிம்பிக் சங்க கொடி ஆகியவற்றை ஏற்றி வைத்தனர். ஊசு தற்காப்பு கலை சங்க பொதுச் செயலாளர் மேரி ஜெயின், பொருளாளர் அசோக், சைக்கிள் சங்க செயலாளர் பிரேம், பில்லியர் சங்க தலைவர் ராஜகுமாரி, சூட்டிங் சங்க இணைச் செயலாளர் முகமது, வில்வித்தை சங்க செயலாளர் அருள், இந்திய விளையாட்டு ஆணையம் சாய் வீரர்கள் கலந்து கொண்டனர்.
