/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரியாணி கடைக்காரருக்கு மிரட்டல்: மூவர் மீது வழக்கு
/
பிரியாணி கடைக்காரருக்கு மிரட்டல்: மூவர் மீது வழக்கு
பிரியாணி கடைக்காரருக்கு மிரட்டல்: மூவர் மீது வழக்கு
பிரியாணி கடைக்காரருக்கு மிரட்டல்: மூவர் மீது வழக்கு
ADDED : ஏப் 26, 2024 11:55 PM
புதுச்சேரி, : புதுச்சேரியில் பிரியாணி கடைக்காரரை மிரட்டிய மூவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
ஏம்பலம் அய்யனார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நிவேத்குமார், 24; மறைமலையடிகள் சாலையோரம் டாடா ஏஸ் வாகனத்தில் இரவு நேர பிரியாணிக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு, கடைக்கு வந்த ஆட்டுப்பட்டி அருண் பிரியாணி கேட்டார். கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால், அருணுக்கு பிரியாணி கொடுக்க சிறிது நேரமாகியது. ஆத்திரமடைந்த அருண், லோக்கலில் உள்ள எனக்கு பிரியாணி கொடுக்க மாட்டியா என கேட்டுவிட்டு, தனது நண்பர்கள் இருவரை போன் செய்து வரவழைத்தார்.
மூவரும் சேர்ந்து நிவேத்குமாரை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆட்டுப்பட்டி அருண் உட்பட 3 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

