/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.டெக்., எம்.பி.ஏ., திட்டம் அறிமுகம்
/
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.டெக்., எம்.பி.ஏ., திட்டம் அறிமுகம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.டெக்., எம்.பி.ஏ., திட்டம் அறிமுகம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.டெக்., எம்.பி.ஏ., திட்டம் அறிமுகம்
ADDED : ஏப் 30, 2024 05:35 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுமையான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.டெக்.,எம்.பி.ஏ.,திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
துறைத் தலைவர் மாரியப்பன் வரவேற்றார்.பல்கலைக்கழக துணைவேந்தர் தரணிக்கரசு தலைமை தாங்கினார். பல்கலைக்கழக மேலாண்மை பள்ளி டீன் மலாபிகா தியோ நோக்கவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகளில் புதுமையான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.டெக்.,எம்.பி.ஏ.,திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டது.
துணைவேந்தர் தரணிக்கரசு பேசும்போது,வணிகமும்,தொழில்நுட்பமும் பிரிக்க முடியாதவை.பல்வேறு தொழில்முறை சூழல்களில் திறன்களை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும்.
பி.டெக்.,பாடத்திட்டத்தினை வணிக நிர்வாகத்துடன் ஒருங்கிணைப்பதன் மூலம் தொழில்நுட்பத்துடன்,நிர்வாக யுத்திகளும் ஒன்று சேர அறிந்து கொள்ள முடியும்.இந்த புதுமையாக ஐந்தாண்டு திட்டத்தை துவங்குவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டார்.
சிறப்பு அமர்வில் மும்பை தேசிய பங்கு சந்தை தலைமை பொருளாதார நிபுணர் திருத்தங்கர் பட்நாயக்,இந்திய ரிசர்வ் வங்கி துணை மேலாளர் ஜோசப் அமலன் ஆகியோர் சிறப்பு அமர்வுகளில் கலந்துரையாடினர்.
டிஜிட்டல் நாணயம், நிதி தொழில்நுட்பம்,நிதி பரிவர்த்தனை குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சார்ந்த மாணவர்கள், பல்துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
வங்கி தொழில்நுட்ப துறை பேராசிரியை கீதா நன்றி கூறினார்.

