ADDED : ஆக 03, 2026 08:01 PM
அ நிறம் | அளவு
பாகூர்: முள்ளோடையில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி – கடலூர் சாலை முள்ளோடையில் உள்ள தனியார் ரெஸ்டோ பார் எதிரே நேற்று முன்தினம் காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவலறிந்த கிருமாம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் சிறப்பு நிலை தலைமை காவலர் திருமுருகேசன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
