தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பஸ் நிலையம் கட்டும் பணி உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆய்வு 

பஸ் நிலையம் கட்டும் பணி உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆய்வு 

பஸ் நிலையம் கட்டும் பணி உள்ளாட்சித்துறை இயக்குனர் ஆய்வு 


ADDED : ஆக 03, 2026 08:01 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 08:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம்  கொம்யூன் பஞ்சாயத்து மூலம் கட்டப்பட்டு வரும்  மடுகரை பஸ் நிலையத்தை உள்ளாட்சித் துறை இயக்குனர் ஆதர்ஷ் ஆய்வு மேற்கொண்டார்.

நெட்டப்பாக்கம் தொகுதி மடுகரையில்  நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. புதியதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையம் கட்டுமான பணியினை உள்ளாட்டசித்துறை இயக்குனர் ஆதர்ஷ் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் சி.எஸ்.ஆர். நிதி உதவியின் மூலம் நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் துார்வாரப்பட உள்ள குளங்கள், நீர்நிலைகளை ஆய்வு செய்த ஆதர்ஷ் கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை விரைந்து பணியை முடிக்கவும்,  மழைக்காலம் வருவதற்கு முன் நீர்நிலைகள், குளங்கள் அனைத்தையும் துார்வாரி நீர் சேமிப்பதற்கு ஏதுவாக பணிகளை தொடங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், செயற் பொறியாளர்  கலாவதி, உதவி பொறியாளர் ராமலிங்கேஸ்வரராவ், இளநிலை பொறியாளர் சுப்பிரமணியன் மற்றும் கொம்யூன்  பஞ்சாயத்து அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us