/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
/
போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு அழைப்பு
ADDED : மே 22, 2024 06:55 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் வேலை தேடும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கு போட்டி தேர்விற்கு ஓராண்டு சிறப்பு பயிற்சி அளிக்க நிறுவனங்களுக்கு அரசு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி விடுத்துள்ள செய்திகுறிப்பு:
இந்திய அரசு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான, தேசிய வாழ்வாதார சேவை மையம் புதுச்சேரியில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த மையமானது, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கு ஓராண்டு கால சிறப்பு பயிற்சி அளிக்க, , புதுச்சேரியில் அமைந்துள்ள போட்டித் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களில் இருந்து 'சீல்' வைக்கப்பட்ட கவரில் விருப்ப மனு கோரப்படுகிறது.
பாடநெறி உள்ளடக்கத்தில், பொது ஆங்கிலம், பொது விழிப்புணர்வு, எண்ணியல் திறன், கணினியில் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு பயிற்சி ஆகியவை அடங்கும்.
இந்த பயிற்சியின் நோக்கம், குரூப் 'சி' பதவிகள், எஸ்.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி., மற்றும் பிற ஆட்சேர்ப்பு நிறுவனங்களால் நடத்தப்படும் காலி இடங்களுக்கான, பல்வேறு தேர்வுகளில் போட்டியிட அவர்களை தயார்படுத்துதல் ஆகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு, தொழில்சார்ந்த கட்டணங்கள், ஒரு மாணவருக்கு , ரூ.1200, பிரதி மாதம் வழங்கப்படும். இந்த பயிற்சி வரும் ஜூலை முதல் தேதியில் இருந்து, துவங்கப்படவுள்ளது.
துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், இரண்டாம் தளம், கனரா வங்கி, ரெட்டியார் பாளையம், புதுச்சேரி., என்ற முகவரிக்கு, விண்ணப்பத்தினை நிறுவனத்தின் முழு விபரங்கள் மற்றும் ஆதார் ஆவணத்துடன் வரும், 30.,ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு, www.labour.gov.in மற்றும் www.ncs.gov.in இணையதள முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

