/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இளம் வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பிவைப்பு
/
இளம் வாக்காளர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பிவைப்பு
ADDED : ஏப் 11, 2024 03:49 AM
காரைக்கால்: காரைக்காலில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு இளம் வாக்காளர்களுக்கு தேர்தல் அழைப்பிதழ் அனுப்பும்பணி துவங்கியது.
காரைக்கால் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் துறை மற்றும் ஸ்வீப் அமைப்பு இணைந்து நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி நேற்று இளம் வாக்காளர்கள் அனைவருக்கும் அவர்களின் வீட்டிற்கு அழைப்பிதழ் அனுப்பும் பணி நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தபால் பெட்டியில் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் அருணகிரிநாதன் தலைமையில் அழைப்பிதழ் அனுப்பும் பணி நடந்தது. மேலும் தேர்தல் துறை சிறப்பு அதிகாரி பக்கிரிசாமி மற்றும் ஸ்வீப் ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
தேர்தல் துறை அனுப்பியுள்ள அழைப்பிதழில் அனைவரும் வரும் 19ம் தேதி அன்று நடைபெறும் தேர்தல் திருவிழாவில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஓட்டுப்போட வரும் போது வாக்காளர் அடையாள அட்டையினை எடுத்து வந்து, அனைவரும் வாக்களித்து ஜனநாயக கடமை ஆற்றுமாறு அறிவுறுத்தப்பட்டது.

