தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இரும்பு கேட் விழுந்து பெண் பலி

இரும்பு கேட் விழுந்து பெண் பலி

இரும்பு கேட் விழுந்து பெண் பலி


ADDED : ஜூலை 27, 2024 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2024 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: இரும்பு கேட் விழுந்து பெண் இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தவளக்குப்பம் அடுத்த அபிேஷகப்பாக்கத்தில் தனியார் கம்பெனியில் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் வடிவேலன். இவரது மனைவி, கோவிந்தம்மாள், 60; மகன் மகேஷ் ஆகியோருடன் கம்பெனியில் தங்கி செக்கியூரிட்டி வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம், கம்பெனி வெளியில் இருந்த இரும்பு கேட்டை, கோவிந்தம்மாள் திறந்தார். அப்போது, திடீரென கேட் அவர் மீது விழுந்தது. அதில் பலத்த காயமடைந்த அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us