/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பணம் கொடுத்ததை நிரூபித்தால் நமச்சிவாயம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?
/
பணம் கொடுத்ததை நிரூபித்தால் நமச்சிவாயம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?
பணம் கொடுத்ததை நிரூபித்தால் நமச்சிவாயம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?
பணம் கொடுத்ததை நிரூபித்தால் நமச்சிவாயம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயாரா?
ADDED : ஏப் 23, 2024 04:03 AM

புதுச்சேரி, : தேர்தலில் பா.ஜ., ஓட்டுக்கு பணம் கொடுத்ததை நிரூபித்தால், தனது எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை நமச்சிவாயம் ராஜினாமா செய்வாரா என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் சவால் விடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது;
தேர்தலை சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், தேர்தல் நடத்தை விதிகள் மீறி தேர்தல் துறை நடத்தி முடித்துள்ளது. புதுச்சேரியில் 21 சதவீதம், 2.24 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை.
தேர்தலில் ஆளும் கட்சி அதிகார பலம், போலீஸ் ஒத்துழைப்பு, தேர்தல் துறை அலட்சியம் இதனை பயன்படுத்தி, ஆளும் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், ரூ. 50 கோடி செலவு செய்து வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ. 500 தடையின்றி வழங்கினார். காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் ஓட்டுக்கு ரூ. 200 விதம், ரூ. 20 கோடி வழங்கியுள்ளார்.
தேர்தலில் பா.ஜ., காங்., கட்சி தொண்டர்கள் பணம் கொடுத்ததாக 8 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. பணம் கொடுத்தவர்களை பிடித்து கொடுத்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
நகர பகுதியில் ரூ. 500க்கு வீதியில் இறங்கி சண்டை போட்ட காட்சிகள் நடந்தது. இது தொடர்பாக தேர்தல் துறையில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.புதுச்சேரியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கவில்லை. ஜனநாயகத்தை இரு கட்சிகளும் காலில் போட்டு மிதித்தனர்.
ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது. அதனால் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்படும். பா.ஜ., வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததை அ.தி.மு.க., நிருபிக்க முடியுமா என நமச்சிவாயம் கேள்வி எழுப்பி உள்ளார்.
அ.தி.மு.க., அதனை நிரூபித்தால் தனது எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வாரா என கூறினார்.
பேட்டியின்போது, நகர செயலாளர் அன்பழகன் உடனிருந்தனர்.

