தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வீடு கட்டும் திட்டத்தில் ஆணை வழங்கல்

வீடு கட்டும் திட்டத்தில் ஆணை வழங்கல்

வீடு கட்டும் திட்டத்தில் ஆணை வழங்கல்


ADDED : ஜூலை 02, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 07:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில் வீடு கட்டும் திட்டத்தில் 57 பயனாளிகளுக்கு, ராமு எல்.எல்.ஏ., ஆணை வழங்கினார்.

மணவெளி தொகுதியில் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி தவளக்குப்பம் த.வெ.க., கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. முதல் கட்ட தவணையாக 54 நபர்களுக்கு தலா ஒரு லட்சம் வீதம் 54 லட்சம் ரூபாயும்,  இரண்டாவது தவணையாக 1 நபருக்கு 60 ஆயிரம் ரூபாயும்,  மூன்றாவது தவணையாக 2 நபர்களுக்கு தலா 70 ஆயிரம் ரூபாய் வீதம் 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என, மொத்தம்  56 லட்சம் ரூபாய்க்கான ஆணையை ராமு எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு வழங்கினார். 

நிகழ்ச்சியில், குடிசை மாற்று வாரியத்தின் இளநிலை பொறியாளர் உதயகுமார், மணவெளி தொகுதி த.வெ.க., நிர்வாகி பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us