ADDED : ஜூலை 02, 2026 07:40 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: யு.டி.சி., உள்ளிட்ட காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலைத் தேர்வு, அடுத்த மாதம் 9ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார் ஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி புள்ளியியல் ஆய்வாளர், வேளாண் அதிகாரி, யு.டி.சி., நுாலக மற்றும் தகவல் உதவியாளர் உள்ளிட்ட 327 காலி பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த மேல்நிலை தேர்விற்கான விண்ணபங்கள் பெறப்பட்டன.
தற்போது இப்பணியிடங்களுக்கான தேர்வுகள் வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடக்கிறது. மேலும் தேர்வு குறித்த விரிவான விளக்கங்கள், ஹால்டிக்கெட் பதிவிறக்கம் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அறிக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
