தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் மருத்துவர் தின விழா

மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் மருத்துவர் தின விழா

மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரியில் மருத்துவர் தின விழா


UPDATED : ஜூலை 02, 2026 07:51 PM

ADDED : ஜூலை 02, 2026 07:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2026 07:51 PM ADDED : ஜூலை 02, 2026 07:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர் தின விழா நடந்தது.

மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம் தலைமை தாங்கினர். மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை இயக்குநர் காக்னே, டீன்கள் கார்த்திகேயன், சஞ்சய், மருத்துவ கண்காணிப்பாளர் பிரகாஷ், துணை மருத்துவ கண்காணிப்பாளர் கிரிஜா, துணை டீன் சவுந்தர்யா, முதுநிலை மருத்துவ மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

விழாவில், மணக்குள விநாயகர் கல்வி நிறுவன தலைவர் தனசேகரன் பேசுகையில், 'மருத்துவம் வெறும் தொழில் அல்ல, அது மனிதநேய சேவையை அடிப்படையாகக் கொண்ட உயரிய பணி. மருத்துவர்கள் தொடர்ந்து அறிவை மேம்படுத்திக் கொண்டு, நோயாளிகளை அன்புடனும், கருணையுடனும் அணுக வேண்டும். மருத்துவத் துறையின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றுவது ஒவ்வொரு மருத்துவரின் கடமையாகும்' என்றார்.

நிறுவனத்தில் மருத்துவக் கல்வி, நோயாளி பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

டீன் சஞ்சய் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us