ADDED : பிப் 24, 2025 04:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : லாஸ்பேட்டை தொகுதியில் இலவச காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.
லாஸ்பேட்டை தொகுதி ஜீவானந்தபுரம் பகுதியில் நாதன் அறக்கட்டளை சார்பில், 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் இலவச காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நாதன் அறக்கட்டளை நிர்வாகி ஏழுமலை தலைமை தாங்கினார். நிர்வாகி சுப்ரமணி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., சாமிநாதன் கலந்து கொண்டு மூத்த குடிமக்களுக்கு ஆயுஷ்மான் பாரத் இலவச காப்பீட்டு அட்டையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ராமச்சந்திரன், மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தி, லட்சுமணன், ஜெகதீசன், சரவணன், நடராஜன், அருண், வெங்கடேசன், திருமால், விஜய பூபதி, வக்கீல் கார்த்திக், சந்துரு, சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

