/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நலத்திட்ட உதவிக்கான அரசாணை வழங்கல்
/
நலத்திட்ட உதவிக்கான அரசாணை வழங்கல்
ADDED : பிப் 22, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிக்கான அரசானை, வழங்கும் நிகழ்ச்சி, அரியாங்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
அதில், திருமண உதவித் தொகை, 3 நபர்களுக்கும், பாலுாட்டும் பெண்கள் 4 பேருக்கும், தொடர் நோய்க்கான அடையாள அட்டை 6 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. அதற்கான அரசாணையை, பாஸ்கர் எம்.எல்.ஏ., பயனாளிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.