/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் பணி ஆணை வழங்கல்
/
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் பணி ஆணை வழங்கல்
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் பணி ஆணை வழங்கல்
மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் பணி ஆணை வழங்கல்
ADDED : மே 27, 2024 05:27 AM

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் பணி ஆணை வழங்கும் விழா நடந்தது.
டி.சி.எஸ்., நிறுவனத்தின் அக்காடமிக் முதுநிலை பொதுமேலாளர் வெங்கடேஸ்வரன் ராமன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தக்-ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் தனசேகரன், மணக்குள விநாயகர் கல்வி குழும செயலாளர் நாராயணசாமி கேசவன்,பொருளாளர் ராஜராஜன் முன்னிலை வகித்தனர். இயக்குனர் வெங்கடாசலபதி வரவேற்றார்.வேலைவாய்ப்பு மைய டீன் கைலாசம் நோக்கவுரையாற்றினார்.
வேலைவாய்ப்பு முகாமில் 850 மாணவர்கள் டிசிஎஸ், சிடிஎஸ், சோஹோ, வோடபோன், ஹெக்சாவேர் போன்ற 90க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிறுவனங்கள் மாணவர்களுக்கு 3 லட்சம் முதல் 12 லட்சம் வரை சம்பளம் வழங்க உள்ளன.இவர்கள் அனைவருக்கும் பணியாணை வழங்கப்பட்டது.
தக்-ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தர் தனசேகரன் பேசும்போது, டிசிஎஸ் நிறுவனம் 2006ம் ஆண்டு முதல் கல்லுாரிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. அதிக எண்ணிக்கையில் மாணவர்களை பணியில் அமர்த்தி வருகின்றது என கூறினார்.
மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் முதல்வர் மலர்க்கண்,தேர்வு கட்டுப்பாட்டாளர், அனைத்து துறை டீன்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
மேலும் மயிலம் பொறியியல் கல்லுாரி, மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரிகளின் வேலைவாய்ப்பு மையத்தின் அதிகாரிகள் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். வேலைவாய்ப்பு மைய பயிற்சி அதிகாரி மதுசூதனன் நன்றி கூறினார்.

