தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வில் இணைந்தது துரதிர்ஷ்டம்: சவுமியா எம்.எல்.ஏ.,

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வில் இணைந்தது துரதிர்ஷ்டம்: சவுமியா எம்.எல்.ஏ.,

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் த.வெ.க.,வில் இணைந்தது துரதிர்ஷ்டம்: சவுமியா எம்.எல்.ஏ.,


UPDATED : மே 28, 2026 07:05 PM

ADDED : மே 28, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 28, 2026 07:05 PM ADDED : மே 28, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: ராஜினாமா செய்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், த.வெ.க.,வில் இணைந்தது துரதிர்ஷ்டமானது என, பா.ம.க., எம்.எல்.ஏ., சவுமியா தெரிவித்தார்.

விழுப்புரத்தில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது:

கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து பா.ம.க.,வின் கொள்கை தெளிவாக உள்ளது. நமக்கு பெய்யக்கூடிய மழையை சேமித்து நீர் மேலாண்மை செய்து விவசாயத்தை செழிக்க வைக்க பல திட்டங்கள் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கான எல்லா முயற்சிகளையும் சட்டசபையிலும், சட்டசபைக்கு வெளியேயும் குரல் கொடுப்போம்.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், த.வெ.க.,வில் இணைந்தது துரதிர்ஷ்டமான விஷயம். அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும் அவர்களது பெயரை வைத்து மக்கள் ஓட்டு போடவில்லை. அவர்கள் சார்ந்த கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள், சின்னம் ஆகியவற்றை வைத்து தான் ஓட்டு போட்டனர். அதற்கு நாம் முக்கியத்துவமும், மரியாதையையும் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு சவுமியா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us