/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயியை தாக்கிய 4 பேருக்கு சிறை
/
விவசாயியை தாக்கிய 4 பேருக்கு சிறை
ADDED : ஏப் 03, 2024 07:23 AM
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவிலை சேர்ந்தவர் கோவிந்தராஜூலு. இவருக்கும், கும்பகோணத்தை சேர்ந்த நடராஜன், பாலகிருஷ்ணன் இடையே சொத்து தகராறு இருந்தது.
கடந்த 1998ம் ஆண்டு கோட்டைமேடு நிலத்தில், அறுவடை பணிக்கு கோவிந்தராஜூலு சென்றார். அங்கு வந்த நடராஜன்,68; பாலகிருஷ்ணன்,70; கோட்டைமேட்டைச் சேர்ந்த அ.தி.மு.க., பேரூராட்சி செயலாளர் எம்.ஜி.ஆர்.தாசன்,55; ஜோக்கர் (எ) சேகர்,50; உள்ளிட்ட 7 பேர் அறுவடைப் பணியை தடுத்து நிறுத்தி கோவிந்தராஜூலுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த கோவிந்தராஜூலு, காட்டுமன்னார்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் நேரடியாக வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின் போது, கோவிந்தராஜூலு இறந்துவிட்ட நிலையில், அவரது மகன் வழக்கை நடத்தி வந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடராஜன், பாலகிருஷ்ணன், எம்.ஜி.ஆர்., தாசன், ஜோக்கர் (எ) சேகர் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

