/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆண்டிற்கு 4 கோடி பேருக்கு மஞ்சள் காமாலை நோய்: டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்

ADDED : மே 29, 2024 05:19 AM

புதுச்சேரி : இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவ கருத்தரங்கை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள்துவக்கி வைத்தார்.
கருத்தரங்கில் சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனையின் குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
ஏ, பி, சி, டி, இ, என, ஐந்து வகையான மஞ்சள் காமாலை நோய்கள் உள்ளன. பிறந்த குழந்தைகளுக்கு வைரஸ் பாதிப்புள்ள தாயிடம் இருந்து இந்த நோய் பரவும். தேவையற்ற தடுப்பூசிகள் போட்டுக் கொள்வது, அதிக மது குடித்து கல்லீரல் கெட்டுப் போவது உள்ளிட்ட காரணங்களாலும் இந்நோய் ஏற்படும்.
60 வயதுக்கு மேற்பட்ட சிலருக்கு பித்தக் குழாயில் ஏற்படும் பாதிப்பு காரணமாக வரும் மஞ்சள் காமாலை, கேன்சாராக மாற வாய்ப்பு உள்ளது.
அனைத்து மஞ்சள் காமாலை நோய்களுக்கும் தடுப்பூசிகள் உள்ளன. நோய் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அலோபதி மருத்துவரிடம் சிகிச்சை பெற்றால் குணமாக வாய்ப்புள்ளது. இந்தியாவில் தற்போது 4 கோடி பேருக்கு இந்த பாதிப்பு உள்ளது. ஆண்டுதோறும் இதன் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது' என்றார்.
உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம், அறுவை சிகிச்சை நிபுணர் வெங்கடேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.