/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மேற்குவங்க பெண் டாக்டர் படுகொலையை கண்டித்து ஜிப்மர் டாக்டர்கள் போராட்டம்
/
மேற்குவங்க பெண் டாக்டர் படுகொலையை கண்டித்து ஜிப்மர் டாக்டர்கள் போராட்டம்
மேற்குவங்க பெண் டாக்டர் படுகொலையை கண்டித்து ஜிப்மர் டாக்டர்கள் போராட்டம்
மேற்குவங்க பெண் டாக்டர் படுகொலையை கண்டித்து ஜிப்மர் டாக்டர்கள் போராட்டம்
ADDED : ஆக 14, 2024 06:15 AM

புதுச்சேரி: மேற்குவங்கத்தில் பயிற்சி பெண் டாக்டரை, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை கண்டித்து, புதுச்சேரி ஜிப்மர் டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்க மாநில தலைநகர் கோல்கட்டாவில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன், கருத்தரங்க அறையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
முதற்கட்டமாக டாக்டரின் உடற்கூராய்வில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில், டாக்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பெண் பயிற்சி டாக்டர் படுகொலையை கண்டித்து புதுச்சேரியில், ஜிப்மர் டாக்டர்கள் சங்கம் சார்பில், மருத்துவ கல்லுாரி மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் சமீபத்தில் கண்டன பேரணி நடத்தினர். இந்த நிலையில், நேற்று காலை பணியை புறக்கணித்து, 100,க்கும் மேற்பட்ட டாக்டர்கள் புறநோயாளிகள் பிரிவு வாயிலில், திரண்டு வந்தனர்.
பெண் டாக்டர் கொலையில், வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். மருத்துவமனையில், பாதுகாப்பை உறுதி செய்யாத அதிகாரிகளை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கைகளில் அட்டைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.