/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் டாக்டர்கள் போராட்டம் 'வாபஸ்'
/
ஜிப்மர் டாக்டர்கள் போராட்டம் 'வாபஸ்'
ADDED : ஆக 23, 2024 06:29 AM
புதுச்சேரி: கொல்கத்தா பெண் டாக்டர் கொலை சம்பவத்தை கண்டித்து ஜிப்மர் டாக்டர்கள் நடத்தி வந்த தொடர் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.
கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அனைத்து மாநிலங்களிலும் டாக்டர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஜிப்மரில் பணிபுரியும் 500க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 13ம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதையடுத்து ஜிப்மரில் உள்ள அனைத்து புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்குகள், ஆய்வகங்கள் மற்றும் சி.டி., எம்.ஆர்., ஸ்கேன் சேவைகள் அனைத்து சேவை பிரிவுகளும் முழு மையாக இயங்கும் என, ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

