/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு வரும் 28ம் தேதி கலந்தாய்வு
/
ஜிப்மர் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு வரும் 28ம் தேதி கலந்தாய்வு
ஜிப்மர் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு வரும் 28ம் தேதி கலந்தாய்வு
ஜிப்மர் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கு வரும் 28ம் தேதி கலந்தாய்வு
ADDED : ஆக 18, 2024 03:57 AM
புதுச்சேரி : ஜிப்மர் எம்.எஸ்சி., நர்சிங் படிப்பிற்கான கலந்தாய்வு வரும் 28ம் தேதி நடக்கிறது.
ஜிப்மரில் எம்.எஸ்சி., நர்சிங், 31, பி.பி.டி.என். 19 (போஸ்ட் பேசிக் டிப்ளமோ இன் நர்சிங் ) என, 50 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் ஆன்லைன் முறையில் நுழைவு தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.
அந்த வகையில், 2024 -25ம் ஆண்டு நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 7ம் தேதி நடந்தது. தேர்வு முடிவுகள் 22ம் தேதி வெளியானது. இந்நிலையில், எம்.எஸ்.சி., நர்சிங் பி.பி.டி.என்., ஆகிய பாடப்பிரிவில், உள்ள இடங்கள் நுழைவுத் தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில், நிரப்புவதற்கான கலந்தாய்வு வரும் 28ம் தேதி ஜிப்மர் அகாடமி சென்டரில் நடக்கிறது.
கலந்தாய்வில், பங்கேற்கும் தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் ஜிப்மர் இணையதளத்தில், வெளியிடப்பட்டுள்ளது.
அன்று காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை விண்ணப்பதாரர்களுக்கான பதிவும், மதியம் 2:00 மணியில் இருந்து கலந்தாய்வு நடக்கிறது.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், பிறப்பு சான்றிதழ், மதிப்பெண் மற்றும் சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து வரவேண்டும். கலந்தாய்வில் தேர்வாகும் மாணவர்களுக்கு 29ம் தேதி ஜிப்மரில் மருத்துவ பரிசோதனை நடக்கிறது.

