/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் ஊழியர்கள் இரங்கல் கூட்டம்
/
ஜிப்மர் ஊழியர்கள் இரங்கல் கூட்டம்
ADDED : ஆக 20, 2024 05:15 AM

புதுச்சேரி: பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு, ஜிப்மர் நிர்வாக ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் இரங்கல் கூட்டம் நடந்தது.
கோல்கட்டாவில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இக்கொலை சம்பவத்தை கண்டித்து நாடு முழுதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. ஜிப்மர் மருத்துவமனையிலும் காலவரையற்ற போராட்டம் நடந்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக ஜிப்மர் நிர்வாக பிரிவு ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில், கொலை செய்யப்பட்ட பெண் டாக்டருக்கு இரங்கல் கூட்டம் நேற்று மாலை நடந்தது.
ஜிப்மர் நிர்வாக பிரிவு அலுவலக தரைத்தளத் தில் நடந்த கூட்டத்திற்கு சங்க பொதுச்செய லாளர் உதயபாஸ்கர், செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். தலைவர் பெட்டின் அந்துவான் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் 80க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

