கலித்தீர்த்தாள்குப்பம் அரசு பள்ளி கிரிக்கெட் போட்டியில் முதலிடம்
கலித்தீர்த்தாள்குப்பம் அரசு பள்ளி கிரிக்கெட் போட்டியில் முதலிடம்
ADDED : ஜூன் 24, 2026 03:50 PM
புதுச்சேரி: பள்ளி கல்வித்துறை சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கலித்தீர்த்தாள் குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பெற்று கோப்பையை வென்றது.
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையின் விளையாட்டுப் பிரிவு சார்பில், வட்டம் 4 அளவிலான 19 வயதுக்குட்பட்டோர் ஆண்கள் கிரிக்கெட் போட்டி கடந்த 17ம் தேதி முதல் முதல் 22ம் தேதி வரை சோரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்றன.
போட்டியில் கலித்தீர்த்தாள்குப்பம் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம், பொறையூர் ஆதித்யா வித்யாஷரம் பள்ளி இரண்டாமிடம், திருக்கனுார் சுப்பிரமணிய பாரதி மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம் பெற்றன.
போட்டியில், வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, சோரப்பட்டு, அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பஜூலுதீன் தலைமை தாங்கி, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் செல்வக்குமரன் வரவேற்றார்.
விழாவில், கலித்தீர்த்தாள்குப்பம் அரசு மேல் நிலைப்பள்ளி பொறுப்பாசிரியர் தமிழ்ச்செல்வி, உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். உடற்கல்வி ஆசிரியர் அமல்ராஜ் ஜார்ஜ் சேவியர் நன்றி கூறினார்.
