sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 07, 2026 ,சித்திரை 24, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கள்ளக்குறிச்சி எஸ்.பி., உளவுத்துறைக்கு மாற்றம்

/

கள்ளக்குறிச்சி எஸ்.பி., உளவுத்துறைக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி எஸ்.பி., உளவுத்துறைக்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி எஸ்.பி., உளவுத்துறைக்கு மாற்றம்


ADDED : மே 06, 2026 10:31 PM

Google News

ADDED : மே 06, 2026 10:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., அரவிந்த் உளவுத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்ட எஸ்.பி.,யாக பணிபுரிந்த அரவிந்த், கடந்த ஆண்டு டிச., மாதம் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி.,யாக மாற்றப்பட்டார். இதனையடுத்து கடந்த ஜன.,1ம் தேதி கள்ளக்குறிச்சி எஸ்.பி.,யாக அரவிந்த் பொறுப்பேற்று பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், சட்டசபை தேர்தலுக்கு பின்பு தற்போது தமிழகத்தில் த.வெ.க., தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்க உள்ள நிலையில், கள்ளக்குறிச்சி எஸ்.பி., அரவிந்த் அவசரப் பணிகளுக்காக உளவுத்துறை ஐ.ஜி., அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு பதிலாக விழுப்புரம் எஸ்.பி., சாய் பிரனீத் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் பணிகளை கூடுதலாக கவனித்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us