ADDED : ஜூலை 31, 2026 11:32 PM
அ நிறம் | அளவு
சென்னை,ஆக.
1- குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி மின்சார தாக்கி இறந்தார். பெரம்பூர், மாணிக்க விநாயகர் கோவில் தெருவில், வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், புதிதாக கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த முத்து, 45, உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். குழிக்குள் முத்து இறங்கியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். புகாரின் பேரில் செம்பியம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
