ADDED : ஜூலை 31, 2026 10:42 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுகள் நிர்வாக காரணங்களால் தள்ள வைக்கப்படுகிறது.
இதுகுறி்தது புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு-2025, நிர்வாகக் காரணங்களால் தள்ளி வைக்கப்படுகிறது. இந்த தேர்வுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். தேர்வுகள் பற்றிய புதுப்பிப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் https://recruitment.py.gov.in/ என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
