முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா
ADDED : ஜூலை 16, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது.
பள்ளி தாளாளர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். பள்ளி அளவிலான சமுதாய நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
மருத்துவர் ரத்தினவேல் காமராஜர் முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜன் வாழ்த்தி பேசினார். பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் மற்றும் துணை முதல்வர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் ஹேமலதா மற்றும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் ஆகியோர் செய்திருந்தனர்.
