/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நிலம் அரசாணை போலி: சப் கலெக்டர் தகவல் சப் கலெக்டர் தகவல்
/
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நிலம் அரசாணை போலி: சப் கலெக்டர் தகவல் சப் கலெக்டர் தகவல்
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நிலம் அரசாணை போலி: சப் கலெக்டர் தகவல் சப் கலெக்டர் தகவல்
காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நிலம் அரசாணை போலி: சப் கலெக்டர் தகவல் சப் கலெக்டர் தகவல்
ADDED : செப் 10, 2024 06:50 AM
புதுச்சேரி: ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நிலம் இலவசமாக வழங்கப்படுவதாக உலா வரும் போலி அரசாணையை நம்ப வேண்டாம் என வருவாய்த்துறை கேட்டு கொண்டுள்ளது.
சப்கலெக்டர் வினயராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
காரைக்கால் மாவட்டம், கோவில்பத்து வருவாய் கிராமத்தில்அமைந்துள்ள பார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சுற்றுலாத்துறைக்கும், இந்திய எரிவாயு ஆணையத்திற்கும் இலவசமாக வழங்குவது போன்ற ஒரு போலி அரசாணை, வருவாய் சிறப்பு செயலர் கையொப்பத்தில் உருமாற்றம் செய்து போலியான அரசாணை சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாக தெரிய வருகிறது.
இது உண்மைக்கு புறம்பான மற்றும் முற்றிலும் தவறான தகவல். வருவாய் துறை சார்பில் அப்படி எந்த ஒரு அரசாணையும் வெளியிடப்படவில்லை.
இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காரைக்கால் நகரம் வராத நிலையில், இப்படிப்பட்ட போலியான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டு கொள்ளப்படு கிறார்கள்.
வருவாய் துறையின் அரசு ஆணை போன்று தவறுதலாக அதாவது அரசு ஆணை 18/8188 என்ற ஒரு உருமாற்றம் செய்த, இந்த பொய்யான ஆணையை குற்ற நோக்கத்துடன் தயாரித்து வெளியிட்ட நபர்களின்மீதும், குற்றநோக்குடன் பொதுமக்களிடையே தவறான தகவலை சமூக வலைத்தளங்களில் பரவச் செய்த நபர்களின் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்பொருட்டு, சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் வரும் உண்மைக்கு மாறான தகவல்களை நம்ப வேண்டாம்.
இவ்வாறான உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இந்த குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள் என்றும் இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

