/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரீமியர் 'லீக்' கிரிக்கெட் போட்டி காரைக்கால் அணிகள் வெற்றி
/
பிரீமியர் 'லீக்' கிரிக்கெட் போட்டி காரைக்கால் அணிகள் வெற்றி
பிரீமியர் 'லீக்' கிரிக்கெட் போட்டி காரைக்கால் அணிகள் வெற்றி
பிரீமியர் 'லீக்' கிரிக்கெட் போட்டி காரைக்கால் அணிகள் வெற்றி
ADDED : ஆக 18, 2024 04:18 AM

புதுச்சேரி, : புதுச்சேரி பிரீமியர் 'லீக்' கிரிக்கெட் போட்டியில், காரைக்கால் நைட் ரைடர்ஸ் மற்றும் ஒயிட் டவுன் டிராப்தாட் ஜென்ட்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
புதுச்சேரி, துத்திப்பட்டு சீகெம் விளையாட்டு அரங்கில், பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி, நடந்து வருகிறது. நேற்று காலை நடந்த போட்டியில், காரைக்கால் நைட் ரைடர்ஸ், மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணி, 20 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்து, 157 ரன்களை குவித்தது.
தொடர்ந்து ஆடிய மாகி மெகலோ ஸ்டைகர்ஸ் அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகளை இழந்து, 133 ரன்கள் மட்டும் எடுத்தது. இப்போட்டியில், காரைக்கால் நைட் ரைடர்ஸ் அணி, 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட்களை வீழ்த்திய அந்த அணியின் சந்தோஷ் குமரன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
அடுத்து நடந்த போட்டியில், ஏனாம் ராயல்ஸ் அணி மற்றும் ஒயிட் டவுன் டிராப்தாட் ஜென்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஏனாம் ராயல் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து, 147 ரன்கள் எடுத்தது. அமீர் ழீஷான், 54 பந்துகளில், 68 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய ஒயிட் டவுன் டிராப்தாட் ஜென்ட்ஸ் அணி, 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒயிட் டவுன் டிராப்தாட் ஜென்ட்ஸ் அணியின் ரகுபதி, 39 பந்துகளில் 58 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

