/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சம்பளம் வழங்க கோரி கதர் வாரிய ஊழியர்கள் தொழில்துறை அலுவலகத்தில் முற்றுகை
/
சம்பளம் வழங்க கோரி கதர் வாரிய ஊழியர்கள் தொழில்துறை அலுவலகத்தில் முற்றுகை
சம்பளம் வழங்க கோரி கதர் வாரிய ஊழியர்கள் தொழில்துறை அலுவலகத்தில் முற்றுகை
சம்பளம் வழங்க கோரி கதர் வாரிய ஊழியர்கள் தொழில்துறை அலுவலகத்தில் முற்றுகை
ADDED : மே 20, 2024 09:24 PM

புதுச்சேரி: சம்பளம் வழங்க கோரி கதர் வாரிய ஊழியர்கள் தொழில்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி கதர் கிராம தொழில் வாரியத்திற்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்கள் சம்பளம், நிறுவன செலவீனத்திற்கு, வருடாந்திர கொடை நிதி வழங்கி வருகிறது.
இந்தாண்டு நிதி அளித்தும், கடந்த 2 மாதங்களாக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்களின் பிள்ளைகள் பள்ளி கல்லுாரி கட்டணம், மருத்துவ செலவினத்திற்கு பணம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.
காரைக்கால், மாகி, ஏனாமில் உள்ள கதர் வாரிய கதர் அங்காடிகள் மூடப்பட்டுள்ள நிலையில், எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள கதர் அங்காடியை காலி செய்ய தொழில்துறை இயக்குநரகம் அறிவித்துள்ளது.
புதுச்சேரி கதர் வாரிய உற்பத்தி மையங்களான கதர் நெசவு, கதர் பட்டு நெசவு, சோப்பு உற்பத்தி கூடம், கைமுறை காகித கூடம், தட்டாஞ்சாவடி ஸ்டீல் யூனிட்டிற்கு போதிய மூல பொருட்கள், வாங்கி தராமல் தலைமை செயல் அலுவலர் நரேந்திரன் தாமதம் செய்வதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சம்பளம் வழங்காதது, தலைமை செயல் அலுவலரின் தொழில் முடக்கும் செயலை கண்டித்தும் ஒட்டுமொத்த ஊழியர்களும் நேற்று தட்டாஞ்சாவடி தொழில்துறை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தொழில்துறை இயக்குனர் ருத்ரகவுடு, கதர் வாரிய ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
2 வாரத்தில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், எஸ்.வி. பட்டேல் சாலையில் உள்ள கதர் அங்காடிக்கு மாற்று திட்டம் தயாரித்து சமர்ப்பிக்குமாறு கூறினார். அதைத் தொடர்ந்து கதிர் வாரிய ஊழியர்கள் புறப்பட்டு சென்றனர்.

