/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கதர் கிராம தொழில் வாரியம் முடக்கம் போராட தயாராகும் ஊழியர்கள்
/
கதர் கிராம தொழில் வாரியம் முடக்கம் போராட தயாராகும் ஊழியர்கள்
கதர் கிராம தொழில் வாரியம் முடக்கம் போராட தயாராகும் ஊழியர்கள்
கதர் கிராம தொழில் வாரியம் முடக்கம் போராட தயாராகும் ஊழியர்கள்
ADDED : ஏப் 28, 2024 03:39 AM
புதுச்சேரி கதர் கிராம தொழில் வாரியம் சேவை நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது. பிரதமரின் கிராமப்புற வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்தும் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. இதில், 100க்கம் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கதர் ஆடைகள் தயாரித்து மிக குறைந்த விலையில் விற்பனை செய்வதுடன், சோப்பு தயாரிப்பு, மெத்தை, கதர் நுால் ஊற்பத்தி, ஸ்டீல் பர்னிச்சர்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 8 மாதத்திற்கு முன்பு இங்கு புதியதாக பதவியேற்ற தலைமை அதிகாரி, சோப்பு, மெத்தை, நுால் உற்பத்தி, ஸ்டீல் பர்னிச்சர் கூடங்களுக்கு மூல பொருட்கள் வாங்கி தராமல் அங்கிருந்த மேற்பார்வையாளர்களை தலைமை அலுவலகத்திற்கு வரவழைத்து வேலையின்றி அமர வைத்துள்ளார்.
ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அரசு நிதி ஒதுக்கி கொடுத்திருந்தாலும், உரிய நேரத்தில் சம்பளம், ஓய்வூதியதார்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவது ஊழியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தலைமை அதிகாரியை கண்டித்து ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.

