/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வாலிபருக்கு கத்தி வெட்டு 7 பேருக்கு போலீஸ் வலை
/
வாலிபருக்கு கத்தி வெட்டு 7 பேருக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 19, 2024 05:16 AM
புதுச்சேரி: பிறந்தநாள் விழா கொண்டாடிய வாலிபரை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரிக்கலாம்பாக்கம் அடுத்த பெருங்களூர் பேட் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் சரவணன், 23; ஐ.டி.ஐ., படிக்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கு, தனது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த சந்துருவுடன் வில்லியனுார் சென்று, பின் நேற்று அதிகாலை 2:30 மணியளவில் தனத்துமேடு புதிய பைபாஸ் சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த 7 பேர் கொண்ட கும்பல் முகத்தை மாஸ்க்கால் மூடிக்கொண்டு சரவணன் வந்த பைக்கை மடக்கி நிறுத்தி கவுதம் என்பவரை பற்றி கேட்டனர்.
அதற்கு சரவணன் எனக்கு தெரியாது என கூறவே ஆத்திரமடைந்த அந்த கும்பல் சரவணனை கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றனர். படு காயமடைந்தவரை நண்பர்கள் மீட்டு ஜிப்மரில் சேர்த்தனர்.
இதுகுறித்து சரவணனின் சகோதரர் சக்திபிரியன் கொடுத்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து 7 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.