/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கூத்தாண்டர் கோவில் திருவிழா துவங்கியது
/
கூத்தாண்டர் கோவில் திருவிழா துவங்கியது
ADDED : ஏப் 17, 2024 07:55 AM
வில்லியனுார் : வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் திருவிழா நேற்று துவங்கியது.
அதனையொட்டி நேற்று மதியம் மீனாட்சி அம்மனுக்கு சாகை வார்க்கப்பட்டது. மாலை ஊரணி பொங்கல் நிகழ்ச்சியை தொடர்ந்து கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.
இவ்விழா வரும் மே 9ம் தேதிவரை நடக்கிறது. வரும் 23ம் தேதி இரவு திருநங்கைகளுக்கு அழகி போட்டியும், தொடர்ந்து இரவு 9:30 மணிக்கு கூத்தாண்டவர் சுவாமிக்கு தாலி கட்டப்படுகிறது.
மறுநாள் (24ம் தேதி) காலை 9:30 மணிக்கு கூத்தாண்டவர் தேர் திருவிழா நடக்கிறது. தேர் கிராம முக்கிய வீதிகள் வழியாக மாலை 4:30 மணிக்கு அழுகல மைதானத்திற்கு செல்லுகிறது. மே 9ம் தேதி இரவு 8:00 மணியளவில் படுகாலம் எழுப்புதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

