ADDED : செப் 13, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: திருவாண்டார்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சிபெற்று இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., பயில தேர்வு செய்யப்பட்ட மாணவி சிவசக்திக்கு பாராட்டு விழா நடந்தது.
பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி துணை முதல்வர் சேவியர்அந்தோணி தலைமை தாங்கி, மாணவி சிவசக்திக்கு பொன்னாடை அணிவித்து, பள்ளியின் சார்பில் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.
பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

