/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பளு துாக்கும் போட்டியில் சாதித்த பள்ளி மாணவருக்கு பாராட்டு
/
பளு துாக்கும் போட்டியில் சாதித்த பள்ளி மாணவருக்கு பாராட்டு
பளு துாக்கும் போட்டியில் சாதித்த பள்ளி மாணவருக்கு பாராட்டு
பளு துாக்கும் போட்டியில் சாதித்த பள்ளி மாணவருக்கு பாராட்டு
ADDED : ஆக 17, 2024 02:40 AM

நெட்டப்பாக்கம்: பளு துாக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா நடந்தது.
பள்ளி கல்வித்துறை வட்டம் -3, அளவில் பளுதுாக்கும் போட்டி பாகூர் கஸ்துாரிபாய் காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில், மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் மோகன்ராஜ் பங்கேற்று முதல் பரிசு வென்றார். அவருக்கு பாராட்டு விழா நடந்தது.
தலைமையாசிரியர் ஞானசம்பந்தம் தலைமை தாங்கி, கேடயம் மற்றும் சான்றிதழை வழங்கினார்.
ஆசிரியர்கள் மோனா, சுமதி, சரண்யா, புனிதா ஆகியோர் வாழ்த்தினர். ஆசிரியர் கிருபாகரன், எஸ்.எம்.சி., தலைவர் சிவக்குமார் பங்கேற்றனர்.
உடற்கல்வி ஆசிரியர் தரணிதரன் நன்றி கூறினார்.